திடீரென விஜய்க்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி.. 'லியோ'வுக்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'லியோ’ படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் விஜய்யின் பிறந்தநாளில் 'நான் ரெடி’ என்ற பாடல் வெளியாகும் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த போஸ்டருக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அன்புமணி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத்தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 16, 2023
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments