சிம்பு பிறந்த நாளில் டபுள் ட்ரீட் கொடுத்த 'பத்து தல' படக்குழு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘பத்து தல’ படக்குழுவினர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளனர். முதலாவதாக ‘பத்து தல’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. 38 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் சிம்புவின் அட்டகாசமான காட்சிகளும் ஏஜிஆர் கோட்டையில் யாரும் நுழைய முடியாது என்ற வசனமும் உள்ளது . இதிலிருந்து ஏஜிஆர் என்ற அண்டர்வேர்ல்ட் தலைவன் கேரக்டரில் சிம்பு நடித்து உள்ளார் என்பது தெரிய வருகிறது.
அதேபோல் ‘பத்து தல’ படத்தின் சூப்பர் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிம்புவின் அட்டகாசமான போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ ஆகிய டப்புள் ட்ரீட் காரணமாக காரணமாக சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பதும் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
@StudioGreen2, @PenMovies & Team #PathuThala Wishes our #Atman #STR a Fantastic Birthday❤️
— Studio Green (@StudioGreen2) February 2, 2022
Welcome to the King of Underworld #AJR’s Fort??#PathuThalaGlimpse https://t.co/0a0JsMK2UA@Kegvraja @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @nameis_krishna @arrahman pic.twitter.com/JGQDWdDk51
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com