பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரமும் டபுள் எவிக்சனா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஐந்து வாரங்களாக 24 மணி நேரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்றாலும் அதற்கு முந்தைய வாரம் டபுள் எவிக்சன் இருந்தது. இந்த நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்சன் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அபிராமி, அனிதா, தாடி பாலாஜி, ஜுலி, சினேகன், சுருதி மற்றும் தாமரை ஆகியோர் நாமினேஷனில் உள்ள நிலையில் இவர்களில் தாமரை அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருப்பதால் அவர் எவிக்சனில் இருந்து கிட்டத்தட்ட தப்பித்து விட்டார் என்றே கூறலாம் .
இந்த நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் தாடி பாலாஜி, சினேகன், சுருதி ஆகிய மூவர் இருப்பதாகவும் இதில் தாடி பாலாஜி வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாத தாடிபாலாஜி விரதமும் இருப்பதால் அவரால் பிசிக்கல் டாஸ்க் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒருவேளை இந்த வாரம் டபுள் எவிக்சன் இருந்தால் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சினேகன் அல்லது ஸ்ருதி ஆகிய இருவரில் ஒருவர் வெளியே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்ருதிக்கு எதிராக அதிகமாக நெகட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் டாஸ்குகளில் அவர் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதால் ஸ்ருதி வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரம் டபுள் எவிக்சன் உண்டா? அவ்வாறு இடம் உண்டு என்றால் வெளியேறப் போகும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com