அக்சராஹாசனுக்கு இன்று இரட்டை திருநாள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசனுக்கு இன்று பிறந்த நாள் என்பது மட்டுமின்றி அவர் நடித்த முதல் தமிழ்ப்படமான 'விவேகம்' திரைப்படம் இன்று 50வது நாள் என்ற மைல் கல்லை எட்டிய நாள் என்பதால் இன்று அவருக்கு இரட்டை திருநாளாக அமைந்துள்ளது.
நடிகை, உதவி இயக்குனர் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் அக்சராஹாசன் அமிதாப், தனுஷ் நடித்த 'ஷமிதாப்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து புலிக்கு பிறந்தது பூனையல்ல என்பதை நிரூபித்தார். பின்னர் தமிழில் தல அஜித் நடித்த 'விவேகம்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அவரது காட்சிகள் வரும் பகுதிதான் படத்தின் ஹைலைட்டான காட்சி என்பதால் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.
தந்தை கமல்ஹாசன் இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் உதவி இயக்குனராக தற்போது அவர் பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் தந்தையை போல் தேசிய விருதுகள் பெற்று திரையுலகில் புகழ் பெற இந்த இனிய பிறந்த நாளில் IndiaGlitz தனது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை அக்சராஹாசனுக்கு தெரிவித்து கொள்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments