நயன்தாரா ஏன் முதல் இடத்துல இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன். 'டோரா' இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,December 23 2016]

'மாயா' வெற்றி படத்தை அடுத்து நயன்தாரா நடிக்கும் அடுத்த பேய்ப்படம் 'டோரா'. சற்குணம் தயாரிப்பில் அவரது சிஷ்யர் தாஸ் ராமசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் கதை குறித்தும் நயன்தாரா இந்த படத்தில் வந்தது குறித்தும் இயக்குனர் தாஸ், பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார். இந்த படத்தின் கதையை தன் குருநாதரிடம் சொன்னவுடன் 'இந்த கேரக்டருக்கு நயன்தாரா மட்டுமே சரியான தேர்வு. அவங்ககிட்ட கதை சொல், அவங்க ஓகே என்றால் மேற்கொண்டு பார்க்கலாம்' என்று கூறினாராம்

நயன்தாரா கதையை கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டது மட்டுமின்றி இந்த கேரக்டர் குறித்து தன் மனதில் தோன்றிய ஐடியாக்களை கூறியதாகவும், அவருடைய ஸ்டோரி நாட்லெஜ் பார்த்து மிரண்டுவிட்டதாகவும், இதன்பின்னர் அவர் ஏன் முதல் இடத்தில் இருக்கின்றார் என்பதை புரிந்து கொண்டதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு 'கார்'தான் பேய் என்றும், அந்த காருக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் கதையின் முக்கிய டுவிஸ்ட் என்றும் தாஸ் தெரிவித்தார்.

இந்த படத்தின் முக்கிய கேரக்டருக்கு நயன்தாரா தேர்வு செய்தது போலவே அவருடைய தந்தை கேரக்டரை உருவாக்கும்போதே தனக்கு தம்பிராமையாதான் மனதில் வந்ததாகவும், நயன்தாரா-தம்பிராமையா அப்பா-மகள் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்றாக வந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.,

More News

சபாஷ் சரியான போட்டி. சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா போட்டியா?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த சக்திமிக்க பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற அவரது தோழி சசிகலா முயன்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் மேலும் அதே பதவிக்கு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும் குறி வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வடிவேலுவை அடுத்து இன்னொரு பிரபல காமெடியனுடன் இணைந்த சூரி

இன்று வெளியாகும் 'கத்திச்சண்டை' படத்தில் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் சூரி,

'காபில்' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த 'கபாலி' நாயகர்

கடந்த 1986ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்தி படமான 'பஹ்வான் தாதா' என்ற படத்தை தயாரித்தவர் ராகேஷ் ரோஷன்.

சென்னை திரும்பினார் தல அஜித். குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கடந்த சில நாட்களாக 'தல 57' படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியா சென்றிருந்த அஜித், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சென்னை திரும்பியுள்ளார்.

விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்'. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

2016ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்', 'இறைவி', 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை', 'றெக்க' ஆகிய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் திருப்திகரமான வசூலை கொடுத்தது.