வீடு தேடி வரும் காய்கறிகள்: திருப்பூர், நெல்லை போல் சென்னையில் கிடைக்குமா?
- IndiaGlitz, [Friday,April 03 2020]
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மளிகை மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் காய்கறிகள் வாங்கும்போது ஒருசிலர் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் திருப்பூர் பகுதி மக்களுக்கு வீடுதேடி காய்கறி தரும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதன்படி ரூ.30, ரூ.50 மற்றும் ரூ.100 என்ற மூன்று தொகுப்புகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் எந்த தொகுப்பு தேவையோ அதனை போன் செய்து தெரிவித்தால் வீட்டில் டெலிவரி செய்யப்படும் என்று கலெக்டர் கூறியுள்ளார். அந்த தொகுப்பின் விபரங்கள்:
ரூ.30 தொகுப்பு: 100 கிராம் - கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், 250 கிராம் - தக்காளி, பீட்ரூட் , கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா 1 காய் - சுரை, முருங்கை, 1 கட்டு - கீரை
ரூ.50 தொகுப்பு: 100 கிராம் - கத்தரிக்காய், மிளகாய், பாகல், 250 கிராம் - வெண்டைக்காய், தக்காளி, புடலங்காய், பீர்க்கன், பீட்ரூட், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, 1 காய் - சுரை, முருங்கை, 1 கட்டு - கீரை
ரூ.100 தொகுப்பு: 100 கிராம் - கேரட், பீன்ஸ் 50௦ கிராம் - தக்காளி, 250 கிராம் - கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், புடலங்காய், பாகல், பீர்க்கன், பீட்ரூட், 1 காய் - சுரை, முருங்கை, 2 கட்டு - கீரை, 1 கட்டு - கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா
அதேபோல் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ரூ 50, ரூ100, ரூ 150 என மூன்று வித பேக் மற்றும் நடமாடும் காய்கறி அங்காடி சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மாநகர் முழுவதும் 35 வாகனங்களில் கொண்டு வரப்படும் இந்த காய்கறிகளை வாங்கி, பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும், நெல்லை மாநகர துணை கமிஷனர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
#திருப்பூர் மக்களே நாளை முதல் உங்கள் வீடுகள் தேடி காய்கறிகள் 30 ரூபாய் , 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் தொகுப்புகளாக அவர் இருக்கின்றன. பயன்படுத்திக்கொள்ளுங்கள் ! Mobile vegetable shops will be available in #Tiruppur from tomorrow. Vehicle details area wise given below #StayHome pic.twitter.com/Elgi7lvcTT
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) April 2, 2020
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ரூ 50, ரூ100, ரூ 150 என மூன்று வித பேக் மற்றும் நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம். மாநகர் முழுவதும் 35 வாகனங்கள். வீட்டில் இருந்து ஒத்துழைப்பு கொடுங்கள்.#StayHomeStaySafe pic.twitter.com/Y3iGQw7Nn5
— Arjun Saravanan (@ArjunSaravanan5) April 3, 2020