நன்றி தேவையில்லை, உத்தரவு போடுங்கள்: முதல்வருக்கு பிரபல நடிகரும் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ஷாருக்கான் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் உங்களுடைய உதவிக்கு எனது மிகுந்த நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ‘நீங்கள் டெல்லியின் காப்பாளர், எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன தேவை என்பதை எனக்கு உத்தரவாக போடுங்கள். அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ என்று அவர் பதிலளித்துள்ளார். மேலும் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிடம் இருந்து நமது நாட்டை பேணிப் பாதுகாப்போம் என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் இந்த பதில் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Thank you Shah Rukh ji for you kind words. Your generous contribution will touch many lives in this difficult hour. @iamsrk https://t.co/boaozsUXw8
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 3, 2020
सर आप तो दिल्लीवाले हो, thank you मत करो, हुक्म करो। अपने दिल्लीवाले भाइयों और बहनों के लिए हम लगे रहेंगे। ईश्वर ने चाहा तो जल्द ही इस crisis से हम जीत कर निकलेंगे। More strength, resilience and power to your teams on ground sir. https://t.co/PoL7mLtlKa
— Shah Rukh Khan (@iamsrk) April 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments