ஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விந்தணு நலன் என்பது உடலுறவுக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியின் உருவாக்கத்திற்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக குழந்தை பிறப்பு என்றாலோ அது முழுவதும் பெண்களைச் சார்ந்தது என நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் ஆண்களின் உணவு முறையும் அவர்களுடைய வாழ்க்கை முறையும் பெரிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஆண்கள் தங்களுடைய விந்தணு நலனிற்காக சில உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கிறது. அதேபோல ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கும் குழந்தை பிறப்புக்கும் சில ஹெல்தியான உணவுகளை உட்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த வகையில் ஆண்களின் உணவுத்தேர்வு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
1.சோயா உணவுகளை ஆண்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டும். காரணம் இந்த சோயா உணவுகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் (Phytoestrogens) அதிகம் இருக்கின்றன. இது உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை குலைத்து விடுகிறது. இதுகுறித்து பாஸ்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 99% ஆண்களுக்கு இந்த சோயா உணவுகள் விந்தணுக்களின் சமநிலையை சீர்குலைத்து விடுவது தெரியவந்துள்ளது. எனவே சோயா உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
2.டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் ஆண், பெண் இருவருக்கும் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்று. ஆனால் விந்தணு உற்பத்தியில் இந்த டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகள் ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்பானிஷ் நாட்டில் கடந்த 2011 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் விந்தணு குறைபாட்டிற்கு டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகள் முக்கிய காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இயற்கையான கொழுப்புள்ள உணவுகளைத் தவிர, துரித உணவுகள், ஹைட்ரஜனேற்ற எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள், பீட்சா, பாப்கார்ன், வறுத்த அல்லது பொறித்த பண்டங்கள், குளிரூட்டும் மாவு, க்ரீம் வெண்ணெய், காபி போன்றவற்றை தவிர்ப்பது நலம்.
3.பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் (Processed Meats) செய்யப்படும் உணவுகளை ஆண்கள் அதிகளவு உண்ணும்போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக சிக்கன் சாப்பிடக்கூடாது என்பதல்ல. இறைச்சி வகைகள் பதப்படுத்தப்பட்டு இருந்தால் அதைத் தவிர்க்க வேண்டும்.
4.பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்ட உணவு வகைகளால் ஆண்களின் விந்தணு குறைந்து போவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக பூச்சிக்கொல்லி பயன்படுத்தாத பழம், காய்கறிகளைத் தேடி அலைவது கஷ்டம். ஆனால் ரசாயனங்களைக் கொண்டுபழுக்க வைக்காத பழம், காய்கறிகளை சாப்பிடலாம்.
5.அதிக கொழுப்பு கொண்ட பால் உணவுகள் விந்தணுக்களைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கொழுப்பு நீக்கப்படாத பால், கிரீம், சீஸ் போன்றவற்றை ஆண்கள் தவிர்ப்பது நலம்.
சாப்பிடவேண்டிய உணவுகள்- விந்தணுக்களின் அதிக உற்பத்திக்கு சில உணவுத்தேர்வுகளை ஆண்கள் செய்வது அவசியம். அதோடு இந்த உணவுகளை தங்களுடைய அன்றாட மெனுக்களில் கொண்டு வந்துவிட வேண்டும்.
அந்த வகையில் வாழைப்பழம் ஒரு சிறந்த தேர்வாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள Bromelain ஆண்களின் விந்த உற்பத்திக்கு சிறப்பான வகையில் உதவும் எனக் கூறப்படுகிறது.
பசலை கீரையை வாரத்திற்கு 3 முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் விந்தணு உற்பத்திக்கு சிறந்த பயனைத்தரும்.
புரோகலியை சாலட் அல்லது உணவுகளில் பயன்படுத்துவது விந்தணு உற்பத்திக்கு சிறந்தது. இதிலுள்ள புரதச் சத்து விந்தணு உற்பத்தியை விரைவில் அதிகப்படுத்துகிறது.
முட்டையில் அதிகளவு விட்டமின் மற்றும் புரோட்டீன் இருக்கிறது. இதுவும் விந்தணு உற்பத்தியில் சிறந்த பங்கு வகிக்கிறது.
வால்நட்ஸ் – ஒமேகா 3 கொண்ட பாதாம், வால்நட், பிஸ்தா, கேஷுநட்ஸ், வெள்ளரி விதை, எள், பூசணி விதை போன்றவற்றை அன்றாடம் எடுத்துக் கொள்வது நலம்.
வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை, கொத்தமல்லி, சாத்துக்கொடி, ஆரஞ்ச், நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூண்டு விந்தணு உற்பத்திக்கு உதவுவதோடு ஆணுறுப்பு விறைப்பு தன்மை மிகுந்த பயனைத் தரும்.
சாக்லேட் உடலுக்கு கெடுதி எனக் கூறப்பட்டாலும் விந்தணு உற்பத்தியில் நல்ல பலனைக் கொடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாதுளம் பழத்தில் அகிதளவு விட்டமின் மற்று Zing காணப்படுகின்றன. இதுவும் விந்தணு உற்பத்தியில் சிறந்த பங்களிக்கிறது. சப்போட்டா, பீட்ரூட், வெந்தயம், முளைக்கட்டின பயிர், காளான் போன்றவற்றையும் உணவுகளில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆண்கள் டீ, காபியை முடிந்த வரை ஒதுக்கிவிட்டு அதற்குப் பதிலாக க்ரீன் டீ, சத்துமாவு கஞ்சி போன்றவற்றை எடுத்துக் கொள்வது நலம். அதேபோல உடற்பயிற்சியும் ரொம்ப முக்கியம். ஒரே இடத்தில் அமர்ந்து இல்லாமல் நடைப்பயிற்சி, சிறிய சிறிய வேலைகளைச் செய்யும்போது உடல்நலமும் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கூடவே ஆல்கஹால் பழக்கத்தை விட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறைந்தது குழந்தைக்காக முயற்சிக்கும் அந்தக் காலக்கட்டத்திலாவது ஆல்கஹாலை நிறுத்தும்போது ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவை எல்லாவற்றையும் விட மனநலம் மிகவும் முக்கியம். மனஅழுத்தத்தை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com