பெண்களுக்கு எதிரான அவமதிப்பு எதிர்க் கட்சியிலும் இருக்கக் கூடாது… நடிகை குஷ்பு கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார் விமர்சனம் செய்து இருந்தார். அந்த விமர்சனம் சோனியாவை அவமதிப்பாக இருக்கிறது என்றும் அதைத் திரும்ப பெற வேண்டும் என்றும் பாஜகவை சேர்ந்த குஷ்புவே கூறி இருப்பதும் அரசியல் களத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் பங்கு வகித்தப் பின்பே அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை சேர்ந்த நிர்மல் குமாரின் கருத்தைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். காங்கிரஸ் எம்பியும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி முன்னதாக தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டார். தற்போது 3 நாள் சுற்றுப் பயணமாக கொங்கு மண்டலப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “நாக்பூரில் இருக்கும் டவுசர்வாலாக்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது, தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது” என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மறைமுகமாகச் சாடினார்.
இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார், “இத்தாலியைச் சேர்ந்த பார் டான்சர், சோனியா இந்தியாவின் தலை எழுத்தை முடிவு செய்ய முயற்சி செய்யும்போது எங்களுக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உள்ளது” என்று தெரிவித்தார். அதோடு சோனியா காந்தி, ராகுலுக்கு எதிரான சில சர்ச்சைக்குரிய விமர்சனங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த விமர்சனம் பெண்களை அவமதிக்கும் வகையில் இருக்கிறது என்றும் அதைத் திரும்பபெற வேண்டும் என்று நடிகை குஷ்பு வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் நடிகை குஷ்புவின் கோரிக்கைக்கு பதில் அளித்த நிர்மல் குமார் போன்ற மற்ற பாஜக பிரமுகர்கள் அதில் ஒரு தவறும் இல்லை. அவர் இத்தாலியில் என்ன செய்து கொண்டு இருந்தாரோ அதைத்தான் கூறி இருக்கிறோம் எனப் பதில் அளித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிர்மல் குமார் தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
Totally uncalled n unwanted for calling out a woman in such disgraceful manner. Our teachings are not meant to use unparliamentary words towards anyone. Pls refrain from doing so. Let's fight on ideologies and thrive to build the nation democratically. ???? https://t.co/dbh6c0ixhn
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 25, 2021
Knickerwallahs from Nagpur in translation becomes liquor barons from Nagpur ??♂️ pic.twitter.com/tTn0Mo8uO5
— Vishwatma ???? (@HLKodo) January 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com