'புலி'யுடன் 'பாகுபலி'யை ஒப்பிட வேண்டாம். நட்டி நட்ராஜ்
- IndiaGlitz, [Tuesday,September 15 2015]
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து படம் சென்சாருக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளரும் 'சதுரங்க வேட்டை' நாயகனுமாகிய நட்டி நட்ராஜ் தன்னுடைய அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'புலி' படத்தை தலக்கோணம், கேரளா மற்றும் சென்னையில் சுமார் 150 நாட்கள் படமாக்கினோம். தாய்லாந்தில் இரண்டு பாடல்களும் படமாக்கினோம். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்வது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. சிம்புதேவன் என்னிடம் இந்த படத்தின் கதையை கூறும்போது மிகவும் ரசித்து கேட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் கூறிய காட்சிகளை விஷுவலாக கொண்டு வருவதில் பெரும் சவால் இருந்தது. மேலும்
தலக்கோணத்தில் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தியதில்தான் பெரும் சிரமங்கள் ஏ|ற்பட்டது. காடுகளில் படப்பிடிப்பு நடைபெறும்போது பாம்புகள், யானைகள் ஆகியவை படப்பிடிப்பின் இடையே வந்து எங்களை பயமுறுத்தியது. வன அதிகாரிகள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர்.
மேலும் 'ஜில்லா' படத்தின்போதே விஜய்யுடன் எனக்கு நல்ல அறிமுகம் என்றாலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது என்னொடு மிகவும் அவர் நெருங்கிவிட்டார். அண்ணா, தம்பி, நண்பா என அவர் தனது மூடுக்கு தகுந்தவாறு என்னை அழைப்பார்.
மேலும் இந்த படத்தை பலர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி'யுடன் ஒப்பிட்டு வருகின்றனர். தயவுசெய்து இரு படங்களையும் ஒப்பிடவேண்டும். இரண்டும் வெவ்வேறு வித்தியாசமான கதையமும், காட்சி அமைப்புகளும் கொண்ட படங்கள்' என்று நட்ராஜ் கூறியுள்ளார்.