'பணம்' குறித்து ஓவியா கூறிய தத்துவ மழை: நெட்டிசன்கள் விவாதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பணம் குறித்து ஓவியா கூறிய தத்துவம் ஒன்றால் நெட்டிசன்கள் கடுமையான விவாதம் நடத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் புகழ்பெற்ற ஓவியா, அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தத்துவ மழை பொழிந்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக அவர் பதிவு செய்யும் தத்துவங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் திடீரென அவர் கேள்வியெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ’உங்களிடம் இருக்கும் பணத்தால் நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம், அது ஒருபோதும் உங்களை திருப்திப்படுத்தாது’ என்ற ஒரு தத்துவத்தை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பலர் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
பணம் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்றும், பணம் தான் முக்கியம் என்று சிலரும் ’ பணம் வேண்டாம் என்று ஓவியா கூறவில்லை என்றும் நீங்கள் வைத்திருக்கும் பணத்தால் நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம் அது உங்களை திருப்திப்படுத்தாது என்றுதான் ஓவியா கூறியுள்ளதாகவும் நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.
ஓவியா கூறிய இந்த ஒரே ஒரு வரி தத்துவத்திற்கு நூற்றுக்கணக்கான நெட்டிசன்கள் டுவிட்டரில் விவாதம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திடீரென இந்த தத்துவ மழை பொழிய என்ன காரணம் என்றும் ஓவியாவிடம் ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Dont be proud of your money..It will never satisfy you????♀️
— Oviyaa (@OviyaaSweetz) August 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments