புத்தர் சிலை மாதிரி… டொனால்ட் டிரம்ப்? செல்வம் கொழிக்குமா?

  • IndiaGlitz, [Friday,March 12 2021]

பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள்களை வைத்து இருக்கிறோம். அந்த வகையில் குபேரரர் சிலை வைத்தால் செல்வம் குவிந்து கொட்டும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. மேலும் அமைதிக்கும் தியானத்திற்கும் அடையாளமாக நாம் புத்தரின் சிலைகளை பொது இடங்களில் வைத்து வருகிறோம். புத்தரை கொள்கைகளுக்காக மட்டும் அல்லாது சிலர் கடவுளாகவும் கருதி வழிபாடும் செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்து கொண்டார். அதாவது சீன தொழில் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்ட டெனால்ட் டிரம்ப்பின் சிலை அச்சு அசலாக புத்தரைப் போலவே மெழுகை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் தியானத்திற்கு அடையாளமாக இந்த சிலையும் மடியில் கைகளை மடித்து வைத்து கட்டை விரலை வெளியே நீட்டிக் கொண்டு இருக்கிறது.

டிரம்ப்பை வைத்து இப்படியொரு வடிவமைப்பை உருவாக்கிய சீன கலைஞர் தற்போது அதை ஆன்லைனிலும் விற்பனைக்கு வைத்து இருக்கிறார். பலரும் டிரம்பின் சிலையை வடிவமைக்காக மட்டும் அல்லாது அலங்காரத்திற்காகவும் வாங்கிச் செல்வதாக அந்த கலைஞர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் விற்பனையை அதிகப்படுத்த நினைத்த அந்தக் கலைஞர், “டிரம்ப் புத்தர் வேறு யாரையும் விட புத்த மதத்தைப் பற்றி நன்கு அறிவார்” அவரை உங்கள் அலவலகத்தில் வைத்தால் உங்கள் நிறுவனம் மீண்டும் பெரியதாக மாறும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வார்த்தைகளை கேட்ட சிலர் உண்மையிலேயே டிரம்ப் சிலை தொழில் முன்னேற்றத்திற்காக வாங்கியும் வருகின்றனர். இரண்டு அளவுகளில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த சிலை தற்போது இந்திய மதிப்பில் ரூ.44,707 மற்றும் ரூ.11,168 என விற்கப்பட்டு வருகிறது. டொனால்ட் டிரம்ப் அதிபர் தோல்விக்கு பிறகு தற்போது தனது தொழில் நிறுவனங்களில் பிசியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரை இப்போதும் மறக்காத சிலர் இதுபோன்ற வடிவங்களில் மீண்டும் அவரை நினைவுப்படுத்துவது உண்மையிலே உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

More News

'த்ரிஷ்யம்' பட குட்டிப்பாப்பாவின் க்யூட் குடும்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் தெரிந்ததே.

சரத்குமார் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் எவை எவை? அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின்

இன்று குட்டித்தல, அடுத்தது தல, தளபதி தான்: ஷிவாங்கிக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் பின் தற்போது 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்ச கட்டத்திற்கு சென்று உள்ளார்

'மேட்ச்' தொடங்கவுள்ள நிலையில் 'மாஸ்' புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

'மாஸ்டர்' படம் குறித்து பள்ளித்தேர்வில் எழுதிய 6ஆம் வகுப்பு மாணவர்! 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்