புத்தர் சிலை மாதிரி… டொனால்ட் டிரம்ப்? செல்வம் கொழிக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள்களை வைத்து இருக்கிறோம். அந்த வகையில் குபேரரர் சிலை வைத்தால் செல்வம் குவிந்து கொட்டும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. மேலும் அமைதிக்கும் தியானத்திற்கும் அடையாளமாக நாம் புத்தரின் சிலைகளை பொது இடங்களில் வைத்து வருகிறோம். புத்தரை கொள்கைகளுக்காக மட்டும் அல்லாது சிலர் கடவுளாகவும் கருதி வழிபாடும் செய்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்து கொண்டார். அதாவது சீன தொழில் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்ட டெனால்ட் டிரம்ப்பின் சிலை அச்சு அசலாக புத்தரைப் போலவே மெழுகை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் தியானத்திற்கு அடையாளமாக இந்த சிலையும் மடியில் கைகளை மடித்து வைத்து கட்டை விரலை வெளியே நீட்டிக் கொண்டு இருக்கிறது.
டிரம்ப்பை வைத்து இப்படியொரு வடிவமைப்பை உருவாக்கிய சீன கலைஞர் தற்போது அதை ஆன்லைனிலும் விற்பனைக்கு வைத்து இருக்கிறார். பலரும் டிரம்பின் சிலையை வடிவமைக்காக மட்டும் அல்லாது அலங்காரத்திற்காகவும் வாங்கிச் செல்வதாக அந்த கலைஞர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் விற்பனையை அதிகப்படுத்த நினைத்த அந்தக் கலைஞர், “டிரம்ப் புத்தர் வேறு யாரையும் விட புத்த மதத்தைப் பற்றி நன்கு அறிவார்” அவரை உங்கள் அலவலகத்தில் வைத்தால் உங்கள் நிறுவனம் மீண்டும் பெரியதாக மாறும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வார்த்தைகளை கேட்ட சிலர் உண்மையிலேயே டிரம்ப் சிலை தொழில் முன்னேற்றத்திற்காக வாங்கியும் வருகின்றனர். இரண்டு அளவுகளில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த சிலை தற்போது இந்திய மதிப்பில் ரூ.44,707 மற்றும் ரூ.11,168 என விற்கப்பட்டு வருகிறது. டொனால்ட் டிரம்ப் அதிபர் தோல்விக்கு பிறகு தற்போது தனது தொழில் நிறுவனங்களில் பிசியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரை இப்போதும் மறக்காத சிலர் இதுபோன்ற வடிவங்களில் மீண்டும் அவரை நினைவுப்படுத்துவது உண்மையிலே உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout