கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்… நடந்தது என்ன?
- IndiaGlitz, [Wednesday,June 14 2023]
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2021 அதிபர் பதவியில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது முக்கிய அரசு ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக கடந்த வாரத்தில் மியாமி ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 77 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாட இருந்த டொனால்ட் டிரம்ப் அரசு ஆவணங்களை மறைத்து வைத்திருந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக மியாமி ஃபெடரல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் இருந்து ஆஜப்படுத்தி விசாரித்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த 2017-2021 முதல் அதிபர் பதவியை வகித்தார். பின்னர் 2021 தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்ட் டிரம்ப் அரசின் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது புளோரிடா மாகாணத்திலுள்ள வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக மியாமி ஃபெடரல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. 49 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் டிரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அதிலும் புளோரிடா மாகாணத்திலுள்ள பாம் பீச்சில் டிரம்பிற்கு சொந்தமான மார்-எ-லோகா விடுதியில் இருந்து 300 கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் அணுசக்தி திட்டங்கள் ராணுவ ரகசியங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த டிரம்ப் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் மறுத்துள்ளார். மேலும் வழக்கை சந்திக்க தயார் என்றும் கூறியதையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன்பு ஆபாச நடிகைக்கு கட்சி நிதியில் இருந்து லஞ்சம் கொடுத்தாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று ரூ.5 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டிரம்ப் தரப்பு தற்போது மேல்முறையீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் பத்திரிக்கையாளர் ஜீன் கரோலினுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகவும் மற்றொரு வழக்குப் பதிவு செய்ப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் அரசு ஆணவங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் மியாமி நீதிமன்ற வழக்கு விறுவிறுப்பு அடைந்திருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது கேள்விக்குறியாகி வருகிறது.