அமெரிக்க அதிபர் மீது ஆபாச நடிகை போட்ட வழக்கு
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் பல்வேறு சர்ச்சைக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அமெரிக்க ஆபாச நடிகை ஒருவர் டிரம்ப் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் டிரம்ப் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஆனால் குடியரசு கட்சியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதும் தங்களுடைய உறவு வெளியே தெரியாமல் இருக்க $130,00 மதிப்பில் தன்னுடன் ஒப்பந்தம் போட்டதாகவும் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இருதரப்பு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் கையெழுத்திட வேண்டும் என்றும் ஆனால் இந்த ஒப்பந்தத்தில் டிரம்பின் வழக்கறிஞர் கையெழுத்து போட்டதால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டார்மி வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout