ஒரே மாதத்தில் கொரோனா தடுப்பூசி… அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!!!

 

அமெரிக்காவில் ஒரே மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிற சூழலில் கொரோனா தடுப்பூசியை அதற்கு முன்னதாகக் கொண்டு வரவேண்டும் என அதிபர் ட்ரம்ப் அவசரம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை 2 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவிற்கு பலியாவது அங்கு வாடிக்கையாக மாறியிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் அதிபர் ட்ரம்ப் வலுவிழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலைமையை மாற்ற அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பூசிக்கு அவசரம் காட்டுவதாகவும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

தற்போது, செய்தியாளர்களுடன் நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் “கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாம் நெருங்கிவிட்டோம். இன்னும் ஒரு மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்” எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.