ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தாரா? கைதாகும் நிலையில் டெனாலாட் டிரம்ப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது மன்ஹாட்டன் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாகியிருப்பதாகவும் இந்தக் கைதை தவிர்ப்பதற்காக அவரே சரணடைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது குடியரசு கட்சி வேட்பாளராக பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் டிரம்ப் பான் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் அதை மறைப்பதற்காக தேர்தல் பிரச்சாரத் தொகையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது டிரம்ப்பின் வழக்கறிஞராக செயல்பட்டுவந்த மைக்கேல் கோஹனே அவருக்கு எதிராக சாட்சி அளித்துள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது. மேலும் பான் நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விசாரணையில் இருந்துவந்த இந்த வழக்கு தற்போது மன்ஹாட்டன் மாவட்டத்தில் கிரிமினல் வழக்கப் பதிவுசெய்யப் பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு வழக்கு கிரிமினல் வழக்காகப் பதிவுச் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார். எனவே டிரம்ப் கைது செய்யப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் புளோரிடா மாகாணத்தில் வசித்துவரும் டிரம்ப் இந்த வழக்குத் தொடர்பாக நியூயார்க்கிற்கு வருவார் என்றும் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக அவரே சரணடை வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை விட டிரம்ப் குறைவான வாக்குகளைப் பெற்றபோதும் அவருடைய ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்த நிலையில் டிரம்பின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஒருமுறை டிரம்பின் வீட்டில் எஃப்பிஐ விசாரணை நடத்தியது.
இப்படி தொடர்ந்து டிரம்ப் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் ஆபாச நடிகைக்கு அவர் பணம் கொடுத்தார் என்று கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com