பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்த டிரம்ப்

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

குஜராத் முதல்வராக இருந்தபோது அமெரிக்காவுக்கு மோடி நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய பிரதமராக அதே மோடி பொறுப்பேற்றபோது அமெரிக்கா மோடியை சிவப்புக்கம்பளத்துடன் வரவேற்பு அளித்தது.

பிரதமர் மோடி கடந்த மூன்றாண்டுகளில் பலமுறை அமெரிக்காவுக்கு சென்று இந்திய-அமெரிக்க நட்பினை பலப்படுத்தியுள்ளார். குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அவர் நெருங்கிய நண்பராகவும் மாறிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மோடியின் ஆங்கில உச்சரிப்பை அதிபர் டிரம்ப் கிண்டல் செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. டிரம்ப்பை கடந்தமுறை நேரில் சந்தித்தபோது பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் படைகள் குவிக்கப்பட்டது குறித்து கருத்து கூறியபோது 'குறைந்த பலனை அளிக்கும் விஷயத்துக்காக இவ்வளவு அதிக விலையைக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டை பார்க்க முடியாது” என்று கூறினார்.

ஆனால் இந்த கருத்தை 'அமெரிக்கா எதிலும் தனக்கு ஒரு பலனைத் தேடும் நாடு’ என்று தவறாக புரிந்து கொண்ட அதிபர் டிரம்ப், மோடி கூறிய வாக்கியத்தை இந்தியர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் பாணியில் பேசிக்காட்டி கிண்டல் செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அதிபர் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான டிரம்ப் ஒரு நாட்டின் பிரதமரை கிண்டல் செய்து மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். டிரம்பின் இந்த செய்கைக்கு அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ராஜ கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்கா, கனடாவுக்கு விடுத்த சுனாமி எச்சரிக்கை வாபஸ்

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா அருகே இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலையில் 8.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

தமிழக அரசை கிண்டல் செய்த இசையமைப்பாளர் டி.இமான்

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் 100 படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இமான்100' என்ற நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா மகள் அறிமுகமாகும் படம்

'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகரை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக பவனிவந்த ராஜசேகரின் மகள் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார்.

கமல்ஹாசனை சந்திக்க வந்த அன்புமணியின் மனைவி

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொட

விஜய்சேதுபதியின் 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' பிரஸ்மீட்: சில துளிகள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு