15 வயது நடிகையுடன் படுக்கையறையில் டிரம்ப்பின் 76 வயது ஆலோசகர்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Friday,October 23 2020]

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டிரம்பின் ஆலோசகர் ஒருவர் 15 வயது இளம் நடிகையுடன் படுக்கையில் இருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் தலைமை ஆலோசகர் ரூடி ஜியுலியானி. 
76 வயதான ரூடி ஜியுலியானி என்பவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர் என்ற போர்வையில் 15 வயது நடிகை மரியா பகலோவா என்பவர் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்றுள்ளார். டிரம்பின் சாதனைகள் குறித்த பேட்டி என்று அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென ரூடி ஜியுலியானி, அந்த நடிகையுடன் உறவுக்கு தயாராகவுள்ளது போன்றும், அப்போது ஒரு குரல், 15 வயது சிறுமியுடனா உறவு கொள்ள போகிறீர்கள் என்ற குரல் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்து அந்த அறையில் இருந்து எஸ்கேப் ஆவது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.

அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சாச்சா போரன் என்பவர் தான் தனது அடுத்த படத்திற்காக 15 வயது நடிகை மரியா பால் என்பவரை பத்திரிகையாளர் போல் ரூடி ஜியுலியானி அறைக்கு அனுப்பி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.  ஏற்கனவே ஒரு சில அரசியல் நைய்யாண்டி திரைப்படங்களை தயாரித்துள்ள இவர் தற்போது ஓடிடி தளம் ஒன்றுக்காக தயாரிக்கும் திரைப்படத்தில் இந்த காட்சியை இணைக்கவுள்ளாராம். இந்த வீடியோ தற்போது அமெரிக்கா முழுவதும் வைரலாகி வருகிறது 

இந்த நிலையில் இதுகுறித்து ரூடி ஜியுலியானி விளக்கமளித்தபோது, ’அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா திட்டம் குறித்த பேட்டி என்பதால்தான் அந்த பெண்ணிடம் பேட்டிக்கு தயாராக இருந்தேன். அந்த இளம்பெண்ணை நான் எதுவும் செய்யவில்லை. தன்னுடைய திரைப்படத்திற்காக கீழ்தரமாக இயக்குனர் சாச்சா போரன் விளையாடி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.