'அண்ணாத்த' பாணியில் 'டான்' ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட சூரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது என்பதும் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் லேசான இருளில் இருந்த அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இதே பாணியில் ‘டான்’ படத்தின் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகனும், முக்கிய கேரக்டரில் சூரியும் நடித்தி வருகிறார்கள். மேலும் குக் வித் கோமாளி ஷிவாங்கி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை நடிகர் சூரி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ’அண்ணாத்த’ படத்தின் புகைப்படத்தை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பதிவில் ‘டான்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தம்பி சிவகார்த்திகேயனுடன் நான்’ என சூரி பதிவு செய்துள்ளார்.
#Don Shooting spot Thampi @Siva_Kartikeyan udan ?? pic.twitter.com/lI3Mfdxrk7
— Actor Soori (@sooriofficial) August 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments