60 வருட பீட்சாவை இலவசமாக பெற்ற தம்பதி… இனி கொண்டாட்டத்திற்கு லீவே இல்லை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதியினர் 60 வருடத்திற்கு சாப்பிடும் பீட்சாவை இலவசமாகப் பெற்று உள்ளனர். அதுவும் உலகின் பிரபல நிறுவனமான Dominos வில் இருந்து. இந்த அறிவிப்பால் அந்த தம்பதியினர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.
உலகின் பிரபல பீட்சா நிறுவனமாக கருதப்படும் டாமினோஸ் தனது 60 ஆம் வருட பிறந்த நாளை கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி கொண்டாடியது. இதை சிறப்பிக்கும் விதமாக அந்நிறுவனம் வித்தியாசமான ஒரு போட்டியை அறிவித்து இருந்தது. அந்த போட்டியின்படி டிசம்பர் 9 ஆம் தேதி பிறக்கும் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைக்க வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் டோமினிக் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலரும் அந்தப் போட்டிக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்த ஒரு தம்பதி சிலிமென்டைன் ஓர்டு பீல்டு- ஆண்டனிலாட். சிலிமென்ட் நிறைமாதக் கர்ப்பினியாக பிரவசத்திற்கு காத்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்புதான் சிலிமென்ட்டுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை பிறந்தவுடன் இந்தப் போட்டியைப் பற்றி யாரோ சொல்ல உடனே டோமினிக் எனத் தன் குழந்தைக்கு பெயரிட்டு உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தனர்.
போட்டிக்கு நிறைய பேர் விண்ணப்பித்து இருந்தாலும் இந்தத் தம்பதிதான் உரிய சான்றிதழுடன் விண்ணபித்து இருந்தனர். எனவே உடனடியாக பரிசுத் தொகை பற்றிய அறிவிப்பு அவர்களை வந்து சேர்ந்தது. இதன்படி 60 வருடங்களுக்கு பீட்சா சாப்பிடத் தேவையான பணத்தை உடனடியாக அந்நிறுவனம் இத்தம்பதிக்கு வழங்கியது. இந்தப் பரிசுத் தொகை ஒருவருக்கு மட்டும்தான். ஆஸ்திரேலியாவில் ஒருவர் ஒரு மாதத்திற்கு பீட்சா சாப்பிட 14 ஆஸ்திரேலியன் டாலர் தேவைப்படும். 60 வருடத்திற்கு என்றால் 10,080 டாலர். இந்திய மதிப்பில் ரூ.5.60 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையைப் பெற்றுக்கொண்ட சிலிமென்டைன் – ஆண்டனிலாட் தம்பதி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout