கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய கொடூரம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஜருகுமல்லி என்ற பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் காந்தாராவ் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவரது உடல் மருத்துவமனைக்கு வெளியே உள்ள வளாகத்தில் காணப்பட்டது. அந்த உடலை அங்கிருந்து தெரு நாய்கள் கடித்து குதறியதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தெரு நாய்களால் கடித்துக் குதறப்பட்ட முதியவரின் உடலை எடுத்து சென்று சவக்கிடங்கில் வைத்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காந்தாராவ் எப்படி இறந்தார்? உயிருடன் இருக்கும் போதே அவர் வெளியே சென்று மருத்துவமனையைச் சுற்றி வந்தபோது கீழே விழுந்து இறந்து விட்டாரா? அல்லது மருத்துவமனையில் இறந்த அவரது உடலை மருத்துவமனை ஊழியர்கள் தூக்கி வெளியே வீசினார்களா? என்பது குறித்து பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரின் உடல் தெருநாய்களால் குதறப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

குடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!!

இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் பெற்றோரின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு உண்டு

லெபனான் விபத்து!!! மக்கள் எதிர்ப்பு வலுத்தால் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!!!

மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் தேதி 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சியில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பரவல் தடுப்பு திட்டங்களுக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

11 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்து இருக்கும் ஜார்கண்ட் மாநிலக் கல்வி அமைச்சர்!!! பரபரப்பு தகவல்!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சராகவும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகர்நாத் மஹ்தோ (53) நேற்று 11 வகுப்பில் சேர விண்ணப்பித்து

லாக்டவுன்: இந்தியாவில் மாட்டிக்கொண்ட அயல்நாட்டுப் பெண்ணின் சுவாரசியம் மிக்க அனுபவம்!!!

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார் தெரசா சொரியானோ மஸ்க்கோஸ் என்ற பெண்மணி.