சாமியாரை மிஞ்சி ஆசி வழங்கும் நாய்… வைரல் வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்து மதம் மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களிலும் ஆசீர்வாதம் வாங்கும் வழக்கம் இருந்து வருகிறது. அதேபோல ஆசீர்வாதத்தை யார் வழங்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளையும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் நாய் ஒன்று பாரபட்சம் இல்லாமல் ஆசி வழங்கி மகிழும் காட்சி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில்தான் இந்தக் காட்சி அரங்கேறி இருக்கிறது. கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த நாய் கைக்குலுக்கி ஆசீர்வாதம் அளிக்கிறது.
இந்து மதத்தில் நாய் பைரவரின் வாகனம் எனும் நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் நாய் செய்வதை ஆசீர்வாதமாகப் பார்க்கின்றனர். ஆனால் அந்த நாய் மனிதர்களிடம் காட்டும் நேசத்தை சிலர் மெச்சி செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து உள்ளனர். இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments