முதல்முறையாக கொரோனா பாதித்த நாய் உயிரிழப்பு!!! விஞ்ஞானிகள் கவலை!!!

 

அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று பாதித்த நாய் ஒன்று உயிழந்துள்ளது. இதனால் விஞ்ஞானிகளிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இதுவரை எந்த மிருகங்களும் உயிரிழக்கவில்லை. இதுவே முதல்முறை என்பதையும் அமெரிக்காவின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. அந்நாட்டில் 12 நாய்கள், 10 பூனை, 1 புலி, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு மிருகங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இத்தகவலை அந்நாட்டு அரசாங்கமே உறுதிசெய்திருக்கிறது. ஆனால் எந்த உயிரினங்களுக்கும் கடுமையான உடல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. முதல் முறையாக ஸ்டாடன் தீவில் உள்ள ராபர்ட் என்பவருக்குச் சொந்தமான ஜெர்மன் ஷெப்பெர்ட்டு வகை நாய் உயிரிழந்து இருக்கிறது.

வளர்ப்பு நாயிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதை விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தியிருந்தனர். ஆனால் மனிதர்களிடம் இருந்து சில நேரங்களில் கொரோனா நோய்த்தொற்று விலங்குகளுக்கு பரவுகிறது என்பதையும் விஞ்ஞானிகள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டியிருந்தனர். இதனால் பல முக்கிய சுற்றுலாத் தளங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயங்கள் மனிதர்கள் பார்வையிடுவதற்கு மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த நாயின் உரிமையாளர் ராபர்ட் க்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் நோயில் இருந்து மீண்டவதாகவும் நேஷனல் ஜியாகரஃபிக் செய்தி நிறுவனத்திற்கு பேட்டிக் கொடுத்து இருக்கிறார்.

ராபர்ட் நோயில் இருந்து முற்றிலும் குணமான பின்பு ஜெர்மன் ஷெப்பர்ட் இனவகையைச் சார்ந்த நாய்க்கு கடந்த மே மாதத்தில் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகவும் சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில் ஜுன் மாதத்தின் தொடக்கத்தில் பல உடல் கோளாறுகள் வந்தபின்பு ஜுன் 11 ஆம் தேதி உயிரிழந்ததாகவும் ராபர்ட் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாய் கொரோனா வைரஸால்தான் உயிரிழந்து இருக்கிறது என உறுதியாகச் சொல்லமுடியாது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். காரணம் உடல் நலக்கோளாறு ஏற்பட்டபோது சேகரிக்கப்பட்ட நாயின் ரத்த மாதிரிகளில் இலிபோமா என்ற புற்றுநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இறந்த நாயை ராபர்ட் எரித்துவிட்டதால் உடல் பரிசோதனை செய்ய முடியவில்லை என்று தற்போது விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் விலங்குகளுக்கும் உயிரிழப்பு ஏற்படுமா என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கொரோனா மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போன்று விலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டால் அதன் விளைவுகளை நினைத்துக் கூட பார்க்கமுடியாது என்று பலரும் கவலை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

More News

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இணைந்த 'விக்ரம் வேதா' டெக்னீஷியன்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது

இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: தமிழ் திரைப்பட இயக்குனர் அதிரடி கைது!

இந்து மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தமிழ் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அன்பு ஒன்றுதான் வெல்லும்: லதா ரஜினிகாந்த் எழுதி, இசையமைத்து, பாடிய பாடல் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு சிறந்த பாடகி என்பதும் அவர் ஒரு சில திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

அஜித்தை மேடையில் ஆட வைத்த ராஜூ சுந்தரம்: வைரலாகும் அரிய வீடியோ

தல அஜித் அவர்கள் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி, எந்த ஒரு விழாவிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்பதும் அவர் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை

40 ஆண்டுகளுக்கு பின் சகுந்தலாதேவிக்கு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்: அஜித் பட நடிகை எடுத்த முயற்சி

இந்தியாவைச் சேர்ந்த கணித மேதை சகுந்தலாதேவி அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் கின்னஸ் சாதனை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான சான்றிதழ் தற்போது தான் கிடைத்துள்ளது