தன் உயிரைத் தியாகம் செய்து எஜமானைக் காப்பாற்றிய செல்லப்பிராணி… நெகிழ்ச்சி சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைக் கடித்து தன்னுடைய எஜமானருக்கு எச்சரித்து செய்திருக்கிறது ஒரு நாய். அதேசமயம் அறுந்து கிடந்த மின்சாரம் கம்பியில் இருந்து தாக்கிய மின்சாரத்தால் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகமும் நடைபெற்று இருக்கிறது.
கோட்டயம் பகுதியில் விஜயன் என்பவர் அப்பு என்ற நாயை பல ஆண்டுகளாகச் செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடனே செல்வது அப்புவின் பழக்கமாக இருந்து இருககிறது. இந்நிலையில் நேற்று விஜயனின் மகன் அஜேஷ்(32) பக்கத்தில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றிருகிறார். போகும்போது அப்புவும் உடன் சென்றிருக்கிறது. அஜேஷ் செல்போனில் பேசிக்கொண்டே அசால்ட்டாக நடந்த சென்றிருக்கிறார்.
போகும்வழியில் ஒரு மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து இருக்கிறது. இதைப் பார்த்த அப்பு வழியில் ஏதோ கிடக்கிறது என அதை வாயில் கவ்வி தூர வீசமுயற்சித்து இருக்கிறது. இந்நிலையில் அந்தக் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அப்பு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ந்துபோன அஜேஷ் தன்னுடைய உயிரை விட்டு என்னை காப்பாற்றி இருக்கிறானே இந்த அப்பு… என தேம்பி அழுதிருக்கிறார். சம்பவத்தைக் கேள்விப்பட்ட மின்சார ஊழியர்கள் மின்சாரக் கம்பியை சரிசெய்து இருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com