கொரோனா வைரஸ் ஹேர்பின் வடிவத்துக்கு மாறுகிறதா??? சுவாரசியம் நிறைந்த ஆய்வுத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வேகத்தை விட அதிவேகமாக அதன் தன்மை மற்றும் மரபணு போன்றவை மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை The Lancet ஆய்வு இதழ் எடுத்துக் காட்டியிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் கொரோனா வைரஸின் மரபணு 16 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மாற்றம் அடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அது ஏற்படுத்தும் அறிகுறிகள், பாதிப்புகள் போன்றவையும் தொடர்ந்து மாறுப்பட்டுக் கொண்டே இருப்பதை மருத்துவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். தற்போது கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்றவுடன் தனது உண்மையான வடிவத்தில் இருந்து தலையில் பயன்படுத்தும் ஹேர்பின் வடிவத்தில் மாறுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் ஒரு Enveloped Viruses வகையைச் சார்ந்தது என விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அதாவது வைரஸ் உள்ளே இருக்கும் அதற்கு மேல் ஒரு எண்ணெய் போன்ற பிசுப்பிசுப்பு தன்மைக் கொண்ட படலம் அதன் மேல் சுற்றியிருக்கும். இந்த எண்ணெய் போன்ற தன்மையால்தான் கொரோனா வைரஸ் குறைந்தது 3 நாட்கள் வரையிலும் பொருட்களின் மேல் ஒட்டிக் கொள்ள முடிகிறது. நுண்ணோக்கியால் பார்க்கும்போது சூரிய ஒளிக் கதிர்களை போல இது காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதோடு ஸ்பைக் புரதம் வைரஸ்க்கு மேல் ஒரு முள் கிரீடத்தைப் போல இருப்பதால் கொரோனா வைரஸ் குடும்பத்திற்கு லத்தீன் மொழியில் Corona எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இந்தக் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்றவுடன் மனிதச் செல்களில் உள்ள ACE2 Receptor புரதத்தைப் பற்றிக் கொண்டு மனித உடலில் பல்லாயிரக் கணக்கான பிரதியெடுக்கிறது என்பதை முன்னமே விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி இருந்தனர். இந்த கொரோனா வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரதம்தான் மனித உடலில் நோயை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது என்றும் கூறப்பட்டது. தற்போது டாக்டர் பிங் சென் மற்றும் பாஸ்டர் குழந்தைகள் நல மருத்துவமனையின் விஞ்ஞானிகள் இணைந்து கினியோஜெனிக் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியாக கொரோனா வைரஸை ஆய்வு செய்திருக்கின்றனர். அந்த ஆய்வில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்றவுடன் மனிதச் செல்களை பற்றிக் கொள்கிறது. பின்னர் தன்னுடைய வடிவத்தையும் ஹேர்பின் போன்று மாற்றிக் கொள்கிறது எனத் தெரிய வந்துள்ளது.
இப்படி ஹேர்பின் போல மாற்றிக் கொள்வதால்தான் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பிழைத்துக் கொள்ள முடிகிறது எனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருத்து கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் வழிமுறையாகவும் அமையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படி வடிவத்தை மாற்றிக் கொண்ட பிறகே மனித செல்லுடன் பிணைப்பை ஏற்படுத்தவும் மேலும் பல்லாயிரக் கணக்காக கொரோனா வைரஸை மனித உடலில் பிரதியெடுக்கவும் முடிகிறது எனத் தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments