காசநோய் தடுப்பூசி (பி.சி.ஜி) கொரோனாவில் இருந்து காப்பாற்றுமா???

  • IndiaGlitz, [Thursday,April 23 2020]

 

பொது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக போடப்படும் காசநோய் தடுப்பூசி பயன்பாடு, அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது. இதையடுத்து உலகளாவிய மருந்துத்துறையில் Bacillus Calmetter-Guerin (BCG) எனப்படும் காசநோய் தடுப்பூசி குறித்த பேச்சு அதிகரித்து இருக்கிறது. மதிப்பாய்வு செய்யப்படாத இந்த ஆய்வின் முடிவின்படி, பி.சி.ஜி தடுப்பூசியை அதிகம் போட்டுள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும் இறப்பு விகிதம் குறைவு எனவும் தெரிவிக்கிறது.

கொரோனா அபாயத்தில் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பி.சி.ஜி குறித்த இந்தக் கருத்துத் தற்போது பெரும்பாலான மக்களை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் மேற்கத்திய நாடுகளைத் தவிர உலகில் பெரும்பாலான வளரும் நாடுகள் இந்த காசநோய்க்கான தடுப்பூசியை குழந்தைப் பருவத்திலேயே அனைவருக்கும் செலுத்தியிருக்கும். இக்கருத்து தற்போது நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த ஆய்வுமுடிவு இன்னும் உறுதிப்படுத்தப் படாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காசநோய் தடுப்பூசி

பி.சி.ஜி தடுப்பூசி ஆல்பர்ட் கால்மெட் மற்றும் காமில் குய்ரின் என்ற இரண்டு பிரெஞ்சு மருத்துவர்களால் 1921 இல் கண்டுபிடிக்கப்பட்டது. காசநோயால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை, புதிதாகப் பிறந்த குழந்தை ஆகியோருக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் பல நாடுகளில் இந்தத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி போடும்போது மறையாத அளவிற்கு சிறிய வடுவையும் உருவாக்கிவிடும். இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்படுவதால் 86 விழுக்காடு காசநோய் பாதிப்பு வராது எனவும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தடுப்பு மருந்தானது பொது எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் பிறந்த குழந்தையின் இறப்பு விழுக்காடு 50% குறைந்துள்ளதாக மருத்துவ உலகம் கூறுகிறது. காசநோய் மட்டுமில்லாமல் ஒவ்வாமை, ஆஸ்துமா, தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது வேலை செய்கிறது. தொழுநோய் எதிர்ப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காசநோய் தடுப்பூசி கொரோனாவுக்கு பயன்படுமா???

காசநோய் என்பது அடிப்படையில் பாக்டீரியாவினால் உண்டாகும் நோய்த்தொற்று. கொரோனா என்பது வைரஸ் கிருமி. இரடும் அடிப்படையில் வெற்வேறான தன்மைக் கொண்டவை. அதுமட்டுமில்லாமல், கிருமித்தொற்று என்பது புவியியல் பண்புகளோடு நேரடித் தொடர்புடையது ஆகும். மக்கள் தொகை நெருக்கம், வயது வேறுபாடு எனப் பல காரணிகள் கொரோனா விஷயத்தில் கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன. எனவே பி.சி.ஜி தடுப்பூசி போடப்பட்டுள்ள அனைவருக்கும் கொரோனா வராது என்று முடிவிற்கு வருவதற்கான சாத்தியங்களும் குறைவு என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆய்வு முடிவானது மார்ச் 21 ஆம் தேதி பெறப்பட்ட கொரோனா எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. உண்மையில் ஏப்ரல் மாதத்தில்தான் உலகில் பல நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றின் அளவு அதிகரித்து இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவே இந்த ஆய்வு முடிவில் நம்பகத்தன்மை இல்லை எனவும் சில விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து WHO ஏப்ரல் 12 ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் “Bacillus Calmetter-Guerin (BCG) எனப்படும் காசநோய் தடுப்பூசி கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றும்” என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிலும் நெதர்லாந்திலும் சுகாதாரப் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட சோதனையில் பி.சி.ஜி தடுப்பு மருந்து நல்ல பலனைக் கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டே உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனாவில் இருந்து தப்பிக்க பி.சி.ஜி தடுப்பூசியை இப்போது பயன்படுத்தலாம் என்று ஆதரவு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது அடிப்படையில் தவறான வாதம் என்பதை பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். காசநோய்க்கு எதிராகக் கொடுக்கப்படும் தடுப்பூசி குழந்தைப் பருவத்தில் போடப்படுகிறது. வளர்ந்த ஒருவருக்கு இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தினால் அது ஆபத்தில் முடியும் என அமெரிக்க விஞ்ஞானி கெவின் எச்சரிக்கிறார். எனவே நிரூபிக்கப்படாத ஒரு கருத்துக்குப் பின்னால் போவதை விட தற்போதைக்கு சமூக விலகல் மட்டுமே தீர்வு என ஒருசாரார் எச்சரிக்கின்றனர்.

More News

இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு கேட்காமலே உதவி செய்த ரஜினிகாந்த்

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகை சேர்ந்த பல தொழிலாளிகள், நலிந்த நடிகர்கள் உள்பட பலர் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் பெரிய நடிகர் நடிகைகள்

குழந்தைக்கு 'லாக்டவுன்' என பெயர் வைத்த பெற்றோர்கள்: குவியும் வாழ்த்துக்கள்

இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் 'லாக்டவுன்' பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரிபுரா மாநிலத்தில் சஞ்சய் மற்றும் மஞ்சு என்ற தம்பதிக்கு குழந்தை ஒன்று பிறந்தது.

சாப்பாட்டை எல்லாம் வீடியோவா போடணுமா? குஷ்பு ஆதங்கம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தினந்தோறும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்

அண்டாவில் பிரியாணி செய்து ஆதரவற்றோருக்கு அளித்த 'அண்ணாச்சி' நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஏழை எளிய மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர்

நிதியுதவி செய்த விஜய்க்கு நன்றி தெரிவித்த முதல்வர்: 

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் அரசுக்கு உதவும் வகையில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்