பிளாஸ்டிக் முகக்கவசம் கொரோனா வைரஸை தடுக்காதா??? பீதியை கிளப்பும் புதுத்தகவல்!!!
- IndiaGlitz, [Wednesday,September 23 2020]
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிளாஸ்டிக் முகக்கவசம் உதவாது என்ற தகவலை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்பத்துவதில் நாம் பெரும்பாலும் முகக்கவசத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். இந்நிலையில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் கொரோனா பரவலைத் தடுக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
பொதுவாக அறுவை சிகிச்சை முகக்கவசம் மற்றும் N95 மாஸ்குகள் மட்டுமே உரிய பாதுகாப்பைக் கொடுக்கக் கூடியது என விஞ்ஞானிகள் வலியுறுத்து கின்றனர். இந்த வகை முகக்கவசங்களைத் தவிர பிளாஸ்டிக்கால் செய்யப்படும் மாஸ்குகளையும் தொழிற்சாலை, மருந்தகம் போன்ற இடங்களில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தவகை மாஸ்குகள் தான் தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவாது எனக் கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் முகக்கவசங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விஞ்ஞானிகள் அதை சூப்பர் கம்பியூட்டரான ஃபுகாகுவோடு இணைத்து ஆய்வில் ஈடுபட்டதாகவும் அப்போது இந்த வகை முகக்கவசங்கள் கொரோனா வைரஸை நீர்த்துளிகளில் இருந்து கட்டுப்படுத்தவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் துகள்கள் பொதுவாகப் பாதிக்கப் பட்டவர்களின் நீர்த்துளிகளில் இருந்துதான் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் பிளாஸ்டிக் முகக்கவசம் சுவாச உறுப்புகளில் பொருந்தி இருக்கும்போது குறைவான அளவிலேயே ஏரோசோல்களைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் 100% பாதுகாப்பை இந்தவகை முகக்கவசங்கள் தராது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும் 50 மைக்ரோ மீட்டர் தொலைவில் உள்ள நீர்த்துளிகளில் இருந்து குறைந்தது 50% துகள்களை பிளாஸ்டிக் முகக்கவசம் கடத்துகிறது. இதனால் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என எச்சரித்து உள்ளனர். இதனால் பருத்துத் துணி மற்றும் அறுவைச் சிகிச்சை முகக்கவசம் மற்றும் N95 முகக்கவசங்களை பயன்படுத்துவதே சிறந்தது எனக் கூறப்படுகிறது.