உண்மையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்துகிறதா???  ஆய்வு முடிவு!!!

  • IndiaGlitz, [Thursday,April 23 2020]

 

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இறக்குமதி செய்ததில் இருந்து உலகம் முழுக்க இந்த மருந்து பேசுபொருளாகவே மாறிவிட்டது. அடிப்படையில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நல்ல பலனைத் தருமா என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், கொரோனா நோய்த்தொற்றால் தீவிரச் சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உலக நாடுகள் பலவற்றில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொடுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துக்கு எதிரான சிலமாற்றுக் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியாவுக்கு சிகிச்சை அளிப்பதை விட முடக்குவாதம், லூபஸ் போன்ற நோய்களுக்கு மிகவும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், உடலில் உள்ள அதிகபடியான நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தவும் இந்த மருந்து திறம்பட உதவுகிறது. கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை குறைத்துவிடுவதால் மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்நிலைமையைச் சரிப்படுத்தவே தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் சில பக்கவிளைவுகளை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்படுத்துவதால் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கொரோனா நோயின் தீவிரம் இல்லாமல் இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும் ஆபத்து ஏற்படுவதாக சிகிச்சையில் தெரிய வந்திருக்கிறது. ஏனெனில் நோய் இல்லாதவர்களிடம் கூட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தலைவலி, வாந்தி, மனஅழுத்தம், திடீர் இருதய நோயை வரவழைக்கும் தன்மைக்கொண்டது. எனவே இந்த மருந்தை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் எனப் பலத் தரப்புகளில் இருந்து கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மருத்துவர்கள் பலக்கட்டங்களாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிசோதித்து வருகின்றனர். அப்படி செய்யப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ஆய்வு முடிவினால் தற்போது சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள VA மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 368 பேரைக் கொண்டு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 3 கட்ட பரிசோதனைகளும் அடக்கம். 1.ஒரு பகுதியினர் ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை மட்டும் கொரோனாவுக்கு மருந்தாக எடுத்துக்கொண்டனர். 2. இன்னொரு பகுதியினர் ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுடன் அஜித்ரோமைசினையும் சேர்த்து எடுத்துக்கொண்டனர். 3. இன்னொரு பிரிவினர் கொரோனாவுக்கு இந்த மருந்துகளுள் எதையும் எடுத்துக்கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தச் சோதனையின் முடிவில் ஏற்பட்ட இறப்பு விகிதம்தான் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சோதனையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை மட்டும் எடுத்துக்கொண்ட முதல் பிரிவினருக்கு 28% உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுடன் அஜித்ரோமைசினையும் சேர்த்து எடுத்துக்கொண்ட 2 வது பிரிவினருக்கு 22% இறப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த மருந்தில் எதையும் எடுத்துக்கொள்ளாத 3 ஆவது பிரிவினருக்கு 11% இறப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் ஆண்கள். மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் இருப்பதால் இந்த ஆய்வு முடிவை முழுமையாக நம்பமுடியாது எனவும் கூறப்படுகிறது. மேலும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் குறித்த சீரான ஆய்வுகள் தேவை எனவும் விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.

நோய் எதிர்ப்பு மண்டலங்களில் அதிக வீரியத்தை ஏற்படுத்தும் மற்ற மருந்துகளைப்போலவே இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சில நேரங்களில் பயன்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தாலும் தொடர்ந்து அதில் சிக்கல் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும், அமெரிக்காவின் பொதுச் சுகாதார பாதுகாப்பு அமைப்பான FDA கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பெரும்பாலான அமெரிக்க மருத்துமனைகளில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டாலும் வடகரோலினா, ஐடஹோ, டெக்காஸின் சில மருத்துவமனைகள் இந்த மருந்தை தவிர்த்து வருகின்றன. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுக்குப் பதிலாக Remdesivir ஐ பயன்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்படத்தக்கது.

More News

உலகம் முழுவதும் இறைச்சி சந்தைகளுக்கு புதிய விதிமுறைகள்!!! WHO வலியுறுத்தல்!!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலக நாடுகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

ஒரே ஒரு பாடலுக்காக கமலுடன் இணைந்த ஒட்டுமொத்த இசையுலகம்

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் படும் துன்பம், இந்த நேரத்தில் மனிதர்கள் சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய மனிதநேயம் ஆகியவை

பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிமாநில தொழிலாளர்களின் நன்றிக்கடன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட 54வது தொழிலாளர்கள் அந்த பள்ளிக்கு செய்த சேவையை பார்த்து அந்த பகுதி மக்கள்

உலக அளவில் 26 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 26,38,024ஆக உயர்ந்துள்ளது.

காகித தாளில் உடை: பிரபல நடிகையின் அட்டகாசம்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒருபக்கம் ஏழை எளிய மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கும் நிலையில்