ஐபிஎல் 2018: ப்ரித்தி ஜிந்தா கனவை நிறைவேற்றுவாரா அஸ்வின்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு நெருங்கிவிட்டதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணியும் போட்டியை எதிர்நோக்க தயாராகி வருகின்றது. இந்த நிலையில் இன்று நாம் தமிழக வீரர் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி குறித்து பார்ப்போம்
பஞ்சாப் அணி கடந்த 2008ஆம் ஆண்டு அரையிறுதி வரையிலும், 2014ஆம் ஆண்டு இறுதி போட்டி வரையிலும் தகுதி பெற்ற அணி. 2014 இறுதி போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. இந்த நிலையில் புதிய கேப்டன் அஸ்வின் தலைமையில் இந்த ஆண்டு களமிறங்கும் பஞ்சாப் அணி கோப்பையை வெல்லுமா?
பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் அஸ்வினுக்கு கைகொடுக்கும் வகையில் கிறிஸ் கெயில், ஆரோன் ஃபின்ச், ராஹுல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். அதேபோல் யுவராஜ்சிங், ஸ்டோனிஸ், அக்சார் பட்டேல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளனர்.
மேலும் பந்துவீச்சில் அஸ்வின், அன்கிட் ராஜ்புத், மொஹித் சர்மா மற்றும் முஜீப் ஜாத்ரான் ஆகியோர் உள்ளனர். 31 வயது அஸ்வின், 36 வயது யுவராஜ் சிங், 38 வயது கிரிஸ்கெயில் ஆகியோர் தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி அணியின் உரிமையாளர் ப்ரித்திஜிந்தா கையில் கோப்பையை வென்று அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments