ஒரு மனிதனுக்கு 2 முறை கொரோனா வருமா??? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞான உலகம் நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் பாதிப்பு ஏற்பட்ட ஒரு சிலருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு எதிராக உடலில் தோன்றும் ஆன்டிபாடிகள் வெறும் 2 மாதங்கள் வரை மட்டுமே நீடிப்பதாகக் கண்டுபிடித்து இருந்தனர். இந்தத் தன்மை அமெரிக்காவில் லேசான கொரோனா பாதிப்புடைய நபர்களிடம் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் ஒருமுறை கொரோனா போன்ற பெருந்தொற்று பாதித்தவரின் உடலில் அந்நோய்க்கு எதிராக குறிப்பிடத்தக்க ஆன்டிபாடிகள் உடலில் தோன்றியிருக்கும். இதனால் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும் எனப் பொதுவாக நம்பப்பட்டது.
கொரோனா விஷயத்தில் இந்த நம்பிக்கை பொய்த்துப் போனது மட்டுமல்லாது, கொரோனா பாதித்து குறைந்தது 3 மாதத்தில் இருந்து 1 ஆண்டிற்குள் அடுத்த பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பாஸ்டன் பல்கலைக் கழகத்தின் உலகச் பொது சுகாதார திட்ட இயக்குநர் பிலிப் காண்ட்ரிகன் தெரிவித்து உள்ளார். இதில் ஒரே ஒரு நல்ல விஷயமாக இரண்டாவது முறை கொரோனா பாதித்த நபர், மற்றவர்களுக்கு அந்நோயை பரப்புவதில்லை எனவும் கண்டறியப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததில் இருந்தே அதன் மரபணு, அறிகுறி, உடல் பாதிப்பு போன்ற பல்வேறு தன்மைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகளும் பெரிய அளவிற்கு விஞ்ஞானிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. குறைந்த நாட்களிலேயே ஆன்டிபாடிகள் குறைந்து நோய்க்கு எதிரான ஆற்றலை இழந்து விடுகிறது. மேலும் 1 ஆண்டுவரை நோய் பாதிப்பு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் புது ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதனால் கொரோனா பாஸ்போட் எனப்படும் மந்தை நோய்க்கான எதிர்ப்பு ஆற்றல் பற்றிய கருத்தில் வலுவில்லாமல் போகிறது. கொரோனா பாதித்தவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையில் தொடருவதற்கு அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout