'பிகில்' படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சை: விஜய்க்கு இவ்வளவு பவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விபத்தில் காயமடைந்த 10 வயது சிறுவனுக்கு விஜய்யின் திரைப்படத்தை போட்டு காட்டி வலி தெரியாமல் சிகிச்சை செய்த டாக்டர்கள் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நேற்று சென்னை அண்ணா சாலையில் 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் உட்கார்ந்திருந்த சசிவர்ஷன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துவிட்டார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுவன் சசிவர்ஷனுக்கு காயம் பட்ட இடத்தில் மருந்து போடவும், சில இடங்களில் தையல் போடவும் வலி தெரியாமல் இருக்கும் ஊசியைப் போட டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஊசி என்றால் பயம் என்று சிறுவன் அழுது சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் அங்கிருந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். அப்போது சிறுவன் சசிவர்ஷன் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது தெரிய வந்ததை அடுத்து தன்னுடைய மொபைல் போனை எடுத்து அதிலிருந்த ’பிகில்’ படத்தை போட்டு காண்பித்தார். அந்த சிறுவன் உடனே அழுகையை நிறுத்திவிட்டு ’பிகில்’ படத்தை சுவராசியமாக பார்த்துக்கொண்டிருந்தபோது டாக்டர்கள் வலி தெரியாமல் இருக்கும் ஊசியை சிறுவனுக்கு செலுத்தி அதன் பின்னர் காயத்துக்கு தையலும் போட்டனர்.
சிறுவன் சசிவர்ஷன், விஜய்யின் ’பிகில்’ படத்தை பார்க்கும் ஆர்வத்தில் இருந்ததால் சிகிச்சை செய்வதையே மறந்து இருந்தான் என்பதும் அவனுக்கு வலியே தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஜய் படத்திற்கு இவ்வளவு பவரா? என டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்ததாக கூறப்பட்டு வருகிறது.
Thalapathy!! ❤️ @actorvijay#Bigil #Beast #Master pic.twitter.com/cTNrNsUnEo
— Actor Vijay FC (@ActorVijayFC) July 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments