8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: வயிற்றுக்குள் ஸ்டாக் வைத்திருந்த வினோத மனிதர்
- IndiaGlitz, [Saturday,May 25 2019]
இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரது வயிற்றில் இருந்து 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ஸ்கேன் செய்த பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வயிற்றில் ஸ்பூன், டூத் பிரஷ், ஸ்குரு டிரைவர் மற்றும் கத்தி ஆகியவை இருந்தது. உடனடியாக தாமதம் இன்றி அவருக்கு அறுவை சிகிச்சை செய்த எல்லாவற்றையும் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இதுகுறித்து அவரிடம் மருத்துவரிடம் விசாரித்தபோது அவர் சரியான பதிலேதும் சொல்லவில்லை. அவருக்கு மனக்கோளாறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.