இரட்டை குழந்தைகள் அளவுக்கு பெரிய கிட்னி: கின்னஸ் சாதனையில் இடம்பெற முயற்சி
- IndiaGlitz, [Tuesday,November 26 2019]
இரட்டைக்குழந்தைகள் அளவுக்கு எடை உள்ள மிகப்பெரிய கிட்னி ஒன்றை நோயாளி ஒருவரது உடலில் இருந்து சர்ஜரி செய்து மருத்துவர்கள் குழு ஒன்று அகற்றியுள்ளது. இந்த சாதனையை கின்னஸில் இடம் பெற மருத்துவ குழுவினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
சராசரியாக ஒரு மனிதனின் உடலில் உள்ள கிட்னியின் எடை 120 முதல் 150 கிராம் மட்டுமே இருக்கும். ஆனால் ஆட்டோசோமல் என்ற நோயாளியின் கிட்னி 7.4 கிலோ எடை இருந்ததை மருத்துவர்கள் பார்த்து அதிசயமும் ஆச்சரியமும் அடைந்தனர். பெரிய கிட்னியால் நோயாளிக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் அந்த கிட்னியை உடலில் இருந்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்
பல மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் நீண்ட நேரம் போராடி மருத்துவர்கள் குழு அந்த 7.4 கிலோ எடையுள்ள கிட்னியை அகற்றினர். இதற்கு முன் மனித உடலிலிருந்து 4.25 கிலோ எடையுள்ள கிட்னி அகற்றியது கின்னஸ் சாதனையாக இருந்து வரும் நிலையில் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் ’கிட்னி நோயால் அவதிப்பட்டு வந்த நோயாளியை ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது கிட்னி வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய அளவில் இருந்தது. அதாவது ஒரு இரட்டை குழந்தை வயிற்றில் இருந்தால் எவ்வளவு எடை இருக்குமோ, அந்த அளவுக்கு அவருடைய கிட்னியின் எடை இருந்ததால் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்து உடனடியாக அந்த கிட்னியை அகற்ற முடிவு செய்தோம் என்று கூறினார்