இளைஞரின் வயிற்றில் இருந்த 20 செமீ நீள கத்தி: மருத்துவர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
இளைஞரின் வயிற்றில் 20 சென்டிமீட்டர் நீள கத்தி ஒன்று இருந்ததை பார்த்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது
ஹரியானாவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பல்வால் என்பவருக்கு சமீபகாலமாக வயிற்றுவலி இருந்துள்ளது. அதுமட்டுமின்றி காய்ச்சல், எடைக்குறைவு சாப்பிடுவதில் பிரச்சனை இருந்ததால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். மருத்துவர்கள் அவரை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அவரது வயிற்றில் 20 சென்டிமீட்டர் நீள கத்தி ஒன்று இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த கத்தியை அகற்றினர். அதன்பின் அவர் ஒரு சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி உள்ளார்
இது குறித்து அவருக்கு அறுவைசிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியபோது, ‘கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சமையலறையில் கத்தி போன்ற ஒரு பொருளை கடித்து விழுங்க முயற்சித்துள்ளார். கடிக்க முடியாததால் தண்ணீர் குடித்து விழுங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிசயத்தக்க வகையில் அந்த கத்தி உணவுப்பாதை, இதயம், நுரையீரல், குடல் என எதையும் சேதப்படுத்தாமல் கல்லீரலில் தங்கியிருந்தது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கத்தியை வெளியே எடுத்தோம். தற்போது அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments