போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணியிடமாற்றம் செல்லாது..! உயர்நீதிமன்றம்.

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம்திரும்ப பெறப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ எனும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்தும், சார்ஹ் மெமோ வழங்கியும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அரசு மருத்துவர்களும், அரசும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.

More News

இந்தியாவின் புதிய பவர்  “ரன் மெஷின்“ சபாலி வர்மா

சமீபத்தில் மல்யுத்த போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட டங்கல் படத்தில் வரும் ஒரு காட்சியில், நடிகர் அமீர்கான் தனது ம

1979 முதல் சினிமா டிக்கெட்டுக்களை சேகரித்து வைத்துள்ள முதியவர்!

சினிமா என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய மோகம் என்றும் தமிழக மக்களின் பொழுது போக்குகளில் மிக முக்கியமானது என்றும் கூறலாம்.

'சூரரை போற்று': மோகன்பாபு கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய 'சூரரை போற்று'திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு கட்டத்தில் உள்ளது.

டெல்லி கலவரம்.. என்ன ஆறுதல் சொல்வீர்கள்..?! இணையத்தை உலுக்கும் புகைப்படம்..!

மனதை உலுக்கும்  அந்த புகைப்படமானது ஒரு கலவரம் நடந்தால் அது எத்தகைய பாதிப்புகளை சாதாராண மக்களுக்கு ஏற்படுத்தட்டும் என காட்டுவதாக உள்ளது.   

எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது: 15 வருட அனுபவமுள்ள தமிழ் நடிகை பேட்டி

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.