இளம்பெண்ணின் தொண்டையில் 1.5 இன்ச் நீள புழு: பச்சையாக மீன் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்
- IndiaGlitz, [Monday,July 13 2020]
25 வயது இளம்பெண் ஒருவர் பச்சையாக மீன் சாப்பிட்டதால் அவரது தொண்டையில் ஒன்றரை இன்ச் நீளத்துக்கு புழு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 25 வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக தொண்டையில் வலி இருந்துள்ளதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவரது தொண்டையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உள்ளே ஒரு புழு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் அந்த புழுவை வெளியே எடுத்தனர். பின்னர் அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பச்சையாக sashimi என்ற மீனை சாப்பிட்டதாகவும் அதன் பின்னரே இந்த வலி தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மீனின் உள்ளே இருந்த புழு அவரது தொண்டையில் சிக்கி இருக்கலாம் என்றும் அதனால் அவருக்கு வலி ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். இது மிக அரிதாகவே நடக்கும் நிகழ்வு என்றும் இருந்தாலும் பச்சையாக மீன் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.