மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது வேகமாக இறக்கின்றனர்!!! இதற்கு என்ன காரணம்???

  • IndiaGlitz, [Friday,May 29 2020]

 

பொதுவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபரைவிட விட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப் படும்போது விரைவிலேயே இறந்து போகின்ற அவலம் தொடர்ந்து நடக்கிறது. இதற்கு அதிகபடியான வைரஸின் துகள் காரணமாக இருக்குமோ என்று சந்தேகத்தை தற்போது விஞ்ஞானிகள் எழுப்பி உள்ளனர். United Kingdom இல் உள்ள Royal College of Physician மருத்துவமனையில் நடத்தப் பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் 5 இல் 1 பகுதி மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டு அல்லது அறிகுறிகளோடு வீட்டில் தனிமைப் படுத்தப் படுவதாக தகவல் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் Medscape நடத்திய ஆய்வில் கொரோனா பாதிப்பினால், இதுவரை நூற்றுக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் இறந்து விட்டதாகவும் 630 சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கிறது. இதற்கு, மற்றவர்களைவிட மருத்துவர்களுக்கு பரவும் கொரோனா வைரஸின் துகள் அதிகமாக இருப்பதே காரணம் எனவும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது மிகவும் நெருக்கமாக செல்ல வேண்டி இருப்பதால் அவர்களை மிக எளிதாக வைரஸ் தொற்றிக் கொள்கிறது என்றும் அப்படி பரவும் வைரஸின் துகள் மிகவும் அடர்த்தியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 2020-2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோய்ப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வைரஸ் துகளின் அளவு குறைவாக இருந்ததகாவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஸ்பானிஷ் நோய்த்தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் வைரஸ் துகள்கள் குறைவாக இருந்ததாகவும் நோயின் தீவிரத்தில் வைரஸ் துகள்கள் மிகவும் வீரியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது கொரோனா விஷயத்திலும் இதுபோல வைரஸ் துகள்களின் அளவும் மாறுபடுமோ எனவும் தற்போது புதிய கோணத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தாலியில் 5 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் துகள் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு வைரஸ் துகள்கள் குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சீனாவில் 94 கொரோனா நோயாளிகளை வைத்து நடத்தப் பட்ட மற்றொரு ஆய்வில் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் அறிகுறிகளே இல்லாமல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களுக்குப் பெரும்பாலும் நோய் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே வைரஸ் அவர்களது உடலை விட்டு சென்று விட்டதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் சீனாவில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வரும் 76 நோயாளிகளிடம் அதிக சுமைக்கொண்ட கொரோனா வைரஸ் துகள்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் கொரோனா வார்டுகளில் வேலைப்பார்க்கும் மருத்துவர்கள் சுகாதார வல்லுநர்கள் அதிகநேரம் தூங்கும்போது அவர்களை எளிதில் நோய்கள் அண்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. பொதுவாக தூக்கம் குறையும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாவதாகவும் எச்சரிக்கை செய்யப்படுகிறது. இத்தகைய தரவுகளை வைத்துக்கொண்டு மருத்துவர்களின் வேகமான இறப்புக்கு கொரோனா வைரஸ்களின் அதிக துகள்கள்தான் காரணம் எனக் கூறப்பட்டாலும் அடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர்.

More News

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் 10 வயதுக்கும் கீழான குழந்தைகள்!!! பாகிஸ்தானில் புது நெருக்கடி!!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 10 வயதுக்கும் குறைவான 930 குழந்தைகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது

பிளாஷ் பேக்: 1962 இல் இந்தியா, சீனா எல்லைப்போர்!!! நடந்தது என்ன???

சில நாட்களாக இந்திய எல்லைப் பகுதிகளில் கடும் பதட்டம் நிலவி வருவதை நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டு வருகிறோம்

'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு

கோலிவுட் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் பின்னர் 'ராஜா ராணி' என்ற திரைபடத்தின் மூலம் இயக்குனரானவர் இயக்குனர் அட்லி

'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு? ராம்கோபால் வர்மா அறிவிப்பு

அமெரிக்க நடிகை மியா மல்கோவா நடிப்பில் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய 'கிளைமாக்ஸ்' திரைப்படம் ஜூன் 30-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே ராம்கோபால் வர்மா அறிவித்திருந்தார்.

பிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களின் ஒருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமானமாக மகத் மற்றும் மாடல் அழகி பிராய்ச்சி மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி திருமணம்