ரித்தீஷ் இதயத்தில் மீண்டும் துடிப்பு இருந்ததா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷீக்கு இன்று பிற்பகலில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் ரித்தீஷின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தபோது ரித்தீஷ் இதயத்தில் துடிப்பு இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியானது. ஆனால் சற்றுமுன் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் இறப்பை ராமநாதபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.