ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி விஜய் நடிக்க தயாரா? மருத்துவர் சங்கம் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்காக ஒருபக்கம் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற டாக்டர்கள் குறித்த காட்சிகளுக்கு இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் ரவிசங்கர் இன்னொரு பக்கம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
சேவை செய்யும் மருத்துவர்களுக்கு மெர்சல் திரைப்படம் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், மெர்சலில் மருத்துவ துறையை அவமதிக்கும் வகையில் பொதுவாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் மெர்சல் படத்தை மருத்துவர்கள், மருத்துவ குடும்பத்தினர் பார்க்க வேண்டாம் என்று கூறிய ரவிசங்கர், நடிகர் விஜய் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தால், மருத்துவர்கள் ரூ5க்கு மருத்துவம் பார்க்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments