சிம்புவுக்கு டாக்டர் பட்டம்: கொடுப்பது எந்த பல்கலை தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,January 08 2022]

நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க பிரபல பல்கலைக் கழகம் ஒன்று முன் வந்துள்ளதை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பதும் இந்த பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் 6 மாத குழந்தையிலிருந்து திரையுலகில் நடித்து வரும் நடிகர் சிம்புவுக்கு அவருடைய திரை உலக சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் டாக்டர் பட்டம் கொடுக்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வேல்ஸ் பல்கலையின் வேந்தரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஜொலித்து வரும் சிம்புவுக்கு இந்த டாக்டர் விருது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து டாக்டர் பட்டம் பெறவிருக்கும் சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ரோபோவை திருமணம் செய்யும் நபர்… காரணத்தைக் கேட்டால் அசந்து போவீர்கள்..

ஆஸ்திரேலியாவில் தனிமையில் தவித்து வந்த முதியவர் ஒருவர் ரோபாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்து

டால்பினுடன் முத்தமிட்டு விளையாடும் பிரபல நடிகை… வைரல் புகைப்படம்!

இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை லட்சுமி ராய். இவர் “தாம் தூம்“, “காஞ்சனா“,

சூர்யா பெயரில் வெளியான போலி கடிதம்: என்ன எழுதியுள்ளது தெரியுமா?

நடிகர் சூர்யா அவ்வப்போது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களுடன் கூடிய கடிதத்தை வெளியிடுவார் என்பதும் அவரது கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே

இனிமேல் அடிச்சிறேன்: கமல் முன் சிபி கேள்விக்கு பதில் சொன்ன ராஜூ!

கமல்ஹாசன் அருகில் நின்று கொண்டு சிபி கேட்ட ஒரு கேள்விக்கு இனிமேல் அடிச்சிறேன் என ராஜு பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை: பரவசத்துடன் தாய் முத்தம்!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவர் தனது குழந்தைக்கு பரவசத்துடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.