சிம்புவுக்கு டாக்டர் பட்டம்: கொடுப்பது எந்த பல்கலை தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,January 08 2022]

நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க பிரபல பல்கலைக் கழகம் ஒன்று முன் வந்துள்ளதை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பதும் இந்த பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் 6 மாத குழந்தையிலிருந்து திரையுலகில் நடித்து வரும் நடிகர் சிம்புவுக்கு அவருடைய திரை உலக சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் டாக்டர் பட்டம் கொடுக்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வேல்ஸ் பல்கலையின் வேந்தரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஜொலித்து வரும் சிம்புவுக்கு இந்த டாக்டர் விருது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து டாக்டர் பட்டம் பெறவிருக்கும் சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.