ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர்....! அதிரடி கைது...!

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

சென்னையில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வேகமாக உருவெடுத்து வரும் இக்கடுமையான சூழலில், கொரோனா மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லாததால் ஏராளமான மக்கள் தினமும் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொற்றின் தாக்கம் தீவிரமாகவே உள்ளது. அதைப்போல தமிழகத்திலும் கொரோனா-2-ஆம் அலை தீவிரமாக பரவுவதால், குறிப்பிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறலை குறைக்க, மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது தான் ரெம்டெசிவர் மருந்து.ஆனால் இம்மருந்திற்கு தமிழகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

இதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இதுகுறித்து தீவிரமாக கண்காணித்தனர். தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனைக்கு அருகில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டபோது, அங்கு வந்த காரில் 17 ரெம்டெசிவர் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது இம்ரான்கான். காவல்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, திருவண்ணாமலையைச் சார்ந்த விக்னேஷ்-இடமிருந்து, ரூ.8500 தந்து மருந்தை வாங்கி வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.20000-த்திற்கு விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மருத்துவரையும், திருவண்ணமலை சென்று விக்னேஷ்-யும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விக்னேஷ் ரூ.4700 மதிப்புள்ள ரெம்டெசிவர் மருந்தை, மருத்துவருக்கு ரூ.8500-க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்மருந்தை மருத்துவர் முகமது இம்ரான்கான் நோயாளிகளுக்கு சுமார் 20000-திற்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து மேலும் ஒருவரை கைது செய்த காவல்துறையினர், கள்ளச்சந்தையில் இதுபோன்று மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

More News

எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்து நிற்கிறோம்: ஏஜிஎஸ் உருக்கமான அறிக்கை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமான செய்தி அனைவரின் மனதிலும் இடியாய் இறங்கியது. தமிழ் திரையுலகமே

நேற்றுவரை புதிய படம் குறித்து பேசி கொண்டிருந்தார்: கே.வி. ஆனந்த் மறைவுக்கு சிம்பு இரங்கல்

பிரபல இயக்குநர் கேவி ஆனந்த் அவர்கள் திடீரென இன்று அதிகாலை காலமானதால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேவி ஆனந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக

ஆக்சிஜன் வாங்க ரூ.1 கோடி நிதியுதவி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

'தளபதி 65' நாயகியின் சம்மர்கால கிளாமர் புகைப்படம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்! 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65'. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நிலையில்

ஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு மோசம் அடைந்து உள்ளது.