'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படத்திற்கு தடை: என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,April 23 2022]
தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ திரைப்படம் குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ திரைப்படத்திற்கும் ஒரு நாட்டில் தடை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ஸ் ஆப் மேட்னஸ்’ . இந்த படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஸ்பைடர் மேன் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சேம் ரைமி இயக்கத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தை சவுதி அரேபிய அரசு தடை செய்துள்ளது.
இந்த படத்தில் நடித்த ஒசித்தல் கோமேஸ் என்ற நடிகரின் கேரக்டர் தன்பால் ஈர்ப்பாளராக காட்டப்பட்டுள்ளதால் சவுதி அரேபிய நாட்டின் சட்டத்தின்படி அந்நாட்டில் வெளியிட சான்றிதழை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே சவுதி அரேபிய மார்வெல் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.