10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்! வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரியவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே சில சமயம் டென்ஷன் ஆகிற நிலையில் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு அதீத பொறுமை இருந்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் 10 மாதக் குழந்தையிடம் ரத்தம் எடுக்க ஒரு மருத்துவர் செய்த தந்திரம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
குழந்தைகளுக்கு ஊசி போடுவது, ரத்தம் எடுப்பது என்றால் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். அந்த வகையில் 10 மாத குழந்தையிடம் இருந்து ரத்தம் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த குழந்தைகள் நல மருத்துவரான ரியான் கொய்ட்ஸீ என்பவர் ரத்தம் எடுக்கும்போது குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்க Nat King Cole’s classic என்ற பாடலை பாடி அசத்துகிறார். இந்த பாடலை கேட்ட குழந்தை ரத்தம் எடுக்கும்போது எந்தவித சலனமுமின்றி இருந்ததை பார்த்து குழந்தையின் பெற்றோர்களும் அருகில் இருந்த நர்ஸ்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
இது குறித்து மருத்துவர் ரியான் கொய்ட்ஸ் கூறியபோது, ‘குழந்தைகளுக்கு சிகிச்சை செய்யும்போது அவர்களுக்காக பாட்டு பாடும் தந்திரத்தை நான் செய்வது வழக்கமான ஒன்றுதான். இது காண்போருக்கு வேடிக்கையாக இருந்தாலும் குழந்தைகள் நிச்சயம் சிரிப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. மேலும் இதற்காகவே இந்த மருத்துவர் முறையாக இசையையும் கற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
தனது குழந்தைக்கு ரத்தம் எடுக்கும்போது மருத்துவர் பாட்டு பாடியதை வீடியோ எடுத்துள்ள அந்த குழந்தையின் தாய் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்,இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் தற்போது இந்த மருத்துவருக்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com