சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்த முக்கிய அப்டேட்: அனிருத் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் ’செல்லம்மா’ என்று தொடங்கும் பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டிக்டாக் குறித்த இந்த பாடலை அடுத்து ‘டாக்டர்’ படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ‘நெஞ்சமே’ என்ற இந்த படத்தின் அடுத்த பாடல் வரும் 20ஆம் தேதி வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ள இந்த பாடலுக்காக அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.