இந்த அறிகுறி எல்லாம் இருந்தால் கண் கேன்சரா ?
Send us your feedback to audioarticles@vaarta.com
உளவியலாளர்கள், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும்,சமூக செல்வாக்கு பெற்ற நபராகவும் விளங்கக் கூடிய டாக்டர் சரண்யா ஜெயக்குமார் அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்
எல்லா குழந்தைகளுக்கும் தனக்கு என்ன பிரச்சினை என்பது தெரியும்.ஆனால் அதை சொன்னால் தன்னை என்னவென்று நினைப்பார்கள் என யோசித்து அதற்கு பதில் வேறு எதையோ மாற்றி சொல்லுவார்கள்.ஒரு குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடக்குது என்றால் அந்த குழந்தை அதை தன் அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால் அந்த விஷயத்தை தவிர்த்து வேறு பல காரணங்களை அந்த குழந்தை சொல்வாள்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் மனதில் என்ன பாதிப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான அறிகுறிகள்.கோபம் இருப்பவர்களுக்கு ஒரு விதமான அறிகுறிகள்.அதனால் பொதுவாகவே ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் அவர்களுடைய இயல்பான வாழ்வில் இயங்க மாட்டார்கள்.அவர்கள் சந்தோஷமாக இல்லை அல்லது அவர்களிடம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது.
இது சுற்றி இருப்பவர்களுக்கு தெரிகிறது.ஆனால் அந்த குறிப்பிட்ட நபருக்கு தெரியவில்லை.அது தான் அசாதாரணமான நிலை எனப்படும்.
நான் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது 'குழந்தைகள் மைதானத்தை மறந்து விட்டார்களா?'என்ற தலைப்பில் பேசினோம்.அப்படி பேசும்போது தானாக ஒரு குழந்தை வந்து எங்களுடைய அப்பார்ட்மெண்ட்டில் எல்லா நண்பர்களும் கீழே சென்று விளையாடுவார்கள்.ஆனால் என்னால் முடியவில்லை.எனக்கு ஆசை இருக்கு.நான் விளையாடினால் மற்றவர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயத்திலேயே விளையாட போக மாட்டேன் என கூறும்போது,இந்த நிலையை" தொடர்ந்து அதிகாரம் செய்வதற்கான பயம் அல்லது கணிக்கக்கூடிய செயல்" என்று கூறுவர்.
இவங்க அவங்க என்ன நினைப்பார்கள்! நான் மற்றவர்களை பற்றி கருத்து சொல்லி கொண்டே இருப்பேன்.எனவே நான் ஒரு முயற்சி செய்யும்போது மற்றவர்கள் என்னை பற்றி என்ன சொல்வார்கள் என்ற மனநிலை ஆகும்.இது தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்.
தற்போது சோஷியல் மீடியா பக்கத்தை திறந்தாலே கமெண்ட்ஸ் தான் அதிகமாக பார்க்கப்படுகிறது.இதை அதிகமாக பார்க்கும்போது நமது சுய நம்பிக்கை தான் குறையும்.ஒரு மன நலம் ஒரு தொழில் மட்டுமல்ல.அவை மருத்துவத் துறையில் எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சினையாக இருக்கட்டும் அல்லது மனம் சார்ந்த பிரச்சினையாக இருக்கட்டும்
முதலில் நாம் அதை பற்றி தேடுவது ஆராய்வது எல்லாம் கூகுள் தான்.அதில் தேடி எனக்கு இது தான் பிரச்சினை என அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.இந்த மாதிரியான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
ஒரு பேஷண்ட் .அவருக்கு கண்ணில் சிறு சிவப்பான புள்ளி ஒன்று இருந்தது.அவர் உடனே கூகுளில் தேடி இருக்கிறார்.அப்போது கண் கேன்சர் என்ற பதில் வரவே, அவராகவே நமக்கு கேன்சர் என நினைத்து கொண்டு தன்னுடைய விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் தனக்கு தெரிந்தவர்கள் சொந்தகாரர்கள் என எல்லோரிடமும் கொடுத்து விடுகிறார்.அவர் சாகப் போகிறார் என்று அவரே முடிவு செய்து விட்டார்.
பிறகு ஒரு கண் மருத்துவரை அணுகும் போது அவருக்கு கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை சரியான தூக்கம் தான் இல்லை என இறுதியாக தெரிய வந்துள்ளது.முறையான தூக்கம் எடுத்து கொண்டால் சரியாகி விடும் என டாக்டர் சொல்லவே,அதுவும் சரியாகி விட்டது.இந்த மாதிரியான பல்வேறு விதமான தவறான புரிதல் உள்ள மக்களும் உள்ளனர்.இது போன்ற மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout