'நண்பன்' பட பாணியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பிரசவம்: கிராம மக்கள் அசத்தல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’நண்பன்’ திரைப்படத்தின் பாணியில் வாட்ஸ்அப் வீடியோ மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி என்ற பகுதியில் வசந்தி என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நேரத்தில் திடீரென அவருக்கு பிரசவ வலி வந்தது. முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி எதுவும் இல்லை என்பதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வசந்தியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் அந்த கிராம மக்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள மருத்துவர் பிரியங்கா என்பவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு வசந்தியின் நிலைமை குறித்து கூறினர். உடனே மருத்துவர் பிரியங்கா வாட்ஸ்அப் மூலம் பிரசவம் எப்படி பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். வாட்ஸ் வீடியோ ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க அவர் கொடுத்த அறிவுரையின்படி அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் வசந்திக்கு பிரசவம் பார்த்தனர். இதன் மூலம் வசந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
தற்போது தாய் சேய் இருவரும் நலமாக இருப்பதாக வசந்தியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் அந்தந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நண்பன் திரைப்பட பாணியில் வாட்ஸ்அப் வீடியோ மூலம் மருத்துவரிடம் அறிவுரை கேட்டு கிராமத்தினர் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com