அலாரம் வச்சுக்கொங்க, 'டாக்டர்' அப்டேட் வருது: சிவகார்த்திகேயன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் அப்டேட் வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த கோரிக்கை தற்போது படக்குழுவினர்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு ‘டாக்டர்’ அப்டேட்’ வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், ‘ஓயாம ‘டாக்டர்’ அப்டேட் கேட்டதுக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது. அலாரம் வச்சுக்கோங்க பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். அப்டேட்டேட்டோட வர்றோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக வினய் நடிக்கவுள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
?? An important announcement regarding our #DOCTOR will be rolling your way at 7 PM ?? Stay tuned ??#DoctorUpdateAt7PM@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @KalaiArasu_ @kjr_studios @priyankaamohan @SonyMusicSouth @DoneChannel1 @proyuvraaj
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 13, 2020
ஓயாம #Doctor Update கேட்டதுக்கு ஒரு Super update வருது! ?? 7 PM today! Alarm vechukonga boys & gals! ⏰ Update ooda varom ??#DoctorUpdateAt7PM@Siva_Kartikeyan @SKProdOffl @Nelson_director @priyankaamohan @iYogiBabu @KalaiArasu_ @KVijayKartik @nirmalcuts
— KJR Studios (@kjr_studios) July 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments