புதிய போஸ்டரை வெளியிட்ட 'டாக்டர்' படக்குழு: வைரலாக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டரை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் அட்டகாசமான லுக்கில் உள்ளார். மேலும் நாயகி பிரியங்கா மோகன், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, யோகி பாபு, இளவரசு உள்பட பலர் உள்ளனர். வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த போஸ்டரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டாக்டர்’ திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் புரமோஷனை முழுவீச்சில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். டீசர், டிரைலர் உள்பட இந்த படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It's #Doctor month! Gearing up for full-scale promotions ??#DoctorFromMarch26 #Doctor @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @DoneChannel1 @proyuvraaj @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/oFqjevP4Pc
— KJR Studios (@kjr_studios) March 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments